×

சிம்பு பாடிய ‘ரெயின்போ திரளில்’.. ‘டக்கர்’ லிரிக்கல் பாடல் வெளியீடு !

 

சிம்பு மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடிய ‘ரெயின்போ திரளில்’ பாடல் வெளியாகியுள்ளது. 

பிரபல நடிகரான சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டக்கர்’.  'கப்பல்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா நடித்துள்ளார். இவர்களுடன் கெளஷிக், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

காதல், ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் செம ஸ்டைலிஷ்ஷான லுக்கில் சித்தார்த் நடித்தள்ளார்.  இப்படம் வரும் ஜூன் 9-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ‘ரெயின்போ திரளில்’ லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சிம்பு மற்றும் ஆண்ட்ரியா இணைந்து பாடியுள்ளனர். பாடலாசிரியர் அறிவரசன் எழுதிய இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/JQxxxHmFyj0?autoplay=1&mute=1&start=168><img src=https://img.youtube.com/vi/JQxxxHmFyj0/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">