”ரெய்டு 2' படத்தில் தமன்னா நடனமாடிய பாடல் ரிலீஸ்...!
Apr 11, 2025, 16:13 IST
”ரெய்டு 2' படத்தில் ’நாஷா' என்ற சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார்.
அஜய் தேவ்கன் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ரெய்டு. இதில் தேவ்கன் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ரெய்டு படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 உருவாகியுள்ளது. இதில், அஜய் தேவ்கன், வாணி கபூர் மற்றும் ரஜத் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் 'நாஷா' என்ற சிறப்பு பாடலுக்கு நடிகை தமன்னா நடனமாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானநிலையில், தற்போது தமன்னா நடனமாடியுள்ள இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.