×

வாரே வா!......- சொக்க வைக்கும் 'தமன்னா'வின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.

 

ஊதாநிற உடையில் தமன்னா, போட்டோ ஷுட் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்ளை வெகுவாக ஈர்த்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. தமிழில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற ‌சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள நடிகை தமன்னா, தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஜெயிலர்’ படத்தில் இவர் ஆடிய காவாலா பாடல் செம வைரல். இந்த நிலையில் GQ India Best Dressed 2023 நிகழ்ச்சியில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் கலந்து கொண்டு அசத்தல் போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம் வைரலாகி வருகிறது.

ஊதா நிற ஜொலிக்கும் பேக்லெஸ்  உடையில் தமன்னா கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரது கழுத்தில் சிலுவை டாலர் கொண்ட சங்கிலியும் அணிந்துள்ளார். அதேப்போல அவரது காதலரான விஜய் வர்மாவும் செம ஸ்டைலாக உள்ளார்.