×

சைமா விழாவில் விருதுகளை அள்ளிய தமிழ் திரையுலகம்

 

துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் தமிழ் திரையலகினர் போட்டிபோட்டு விருதுகளை அள்ளிச்சென்றன.

சைமா விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் இவ்விழா துபாயில் நடைபெற்றது. இதில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் விருது வென்ற தமிழ் சினிமா நட்சத்திரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 

சிறந்த இயக்குனருக்கான சைமா விருதை லோகேஷ் கனகராஜ் வென்றார். விக்ரம் என்கிற ஹிட் படத்தை இயக்கியதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.  

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் இயக்குனராக வலம் வரும் மணிரத்னத்திற்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதோடு சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படத்துக்கு கிடைத்தது.சிறந்த அறிமுக நடிகருக்கான சைமா டவிருதை, லவ் டுடே படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் பெற்றார். அதே போல அதிதி ஷங்கர், சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை பெற்றார். 

சிறந்த நடிகைக்கான சைமா விருதை நடிகை திரிஷா தட்டிச்சென்றார். பொன்னியின் செல்வன் 1 படத்தில் குந்தவையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய திரிஷாவுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

நடிகர் மாதவனுக்கு இரண்டு சைமா விருதுகள் கிடைத்தன. ராக்கெட்ரி படத்தை இயக்கியதற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு சைமா விருதுகளை மாதவன் வென்றார். சிறந்த கலை இயக்குனருக்கான சைமா விருது தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது. விக்ரம் படத்தில் நடித்த நடிகர் கமல்ஹாசனுக்கு 2 சைமா விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான சைமா விருது யோகிபாபுவுக்கு வழங்கப்பட்டது. லவ் டுடே படத்துக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சிறந்த வில்லன் நடிகருக்கான விருது எஸ்.ஜே.சூர்யாவுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் காளி வெங்கட்டிற்கும் வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருது வசந்திக்கு கொடுக்கப்பட்டது. சாணி காகிதம் படத்திற்காக கீர்த்தி சுரேஷூக்கும் விருது வழங்கப்பட்டது.

சைமா விழாவில் விருதுகளை அள்ளிச் சென்ற தமிழ் நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.