மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த நடிகர் மற்றும் இயக்குநர் மனோஜ் பாராதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் திரை உலகில் இயக்குநர் இமயம் என போற்றப்பட்டு வருபவர் பாரதி ராஜா. இவரது மகள் மனோஜ் (வயது 48) நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். இவரது மரணம் திரை உலகினரை மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மனோஜ் மறைவு குறித்து தகவல் அறிந்த சேரன், ஆர்.கே.செல்வமணி, லிங்குசாமி, பேரரசு, நாஞ் சில் பிசி அன்பழகன் உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனோஜ் உடல் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதுடன் பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த மனோஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர். மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.