×

நடிகை விசித்திராவிடம் தவறாக நடந்து கொண்ட தெலுங்கு நடிகர்

 

பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி,  ரவீனா தாஹா,  வினுஷா தேவி,  விஷ்ணு விஜய்,  மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா,  யுகேந்திரன் வாசுதேவன்,  பவா செல்லத்துரை,  மணி சந்திரா,  அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.  மேலும்,  போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி,  கானா பாலா,  அர்ச்சனா,  தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.   பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். போட்டியின் இறுதியில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.

 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது நடிகை விசித்திரா தன்னிடம் ஒரு நடிகர் தவறாக நடந்து கொண்டதாக பேசியிருப்பார். தெலுங்கு படப்பிடிப்பின்போது அவர் அறைக்கு வரக்கூறியதாகவும், அவருடைய ஆட்கள் அறை கதவை இரவு முழுவதும் தட்டியதாகவும் அவர் கூறினார். தற்போது அந்த நடிகர் தெலுங்கு பிரபலம் பால கிருஷ்ணா என்பது தெரியவந்துள்ளது. இதை நடிகை விசித்திராவும் உறுதி செய்தார்.