×

விளம்பரங்களில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகை

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து அவர், அடுத்து த்ரி விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடித்துள்ளார் ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கிய அவர், மூன்றாவது முறையாக மகேஷ் பாபுவை இயக்கி யுள்ளார். இப்படத்தில் மகேஷ்பாபுவுடன் இணைந்து, பிரகாஷ் ராஜ், மீனாட்சி சௌத்ரி, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்துவருகிறது. 

இத்திரைப்படத்தில் ஸ்ரீலீலா என்பவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அவர் மதுபானம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனை பலரும் பாராட்டி வருகின்றனர்.