இளைஞரின் கன்னத்தை கடித்த நடிகை பூர்ணா.. சர்ச்சையானதால் விளாசும் நெட்டிசன்கள்
தெலுங்கு டிவி நிகழ்ச்சியில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து நடிகை பூர்ணா சர்ச்சையில் சிக்கிக்கொண்டார்.
தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், காப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான ‘தலைவி’ படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். தற்போது தமிழில் லாக்கப் மற்றும் தெலுங்கி திரிஷ்யம் 2 உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் எப்போதும் கம்பீரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பூர்ணாவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் தெலுங்கு தொலைக்காட்சியில் தீ ஜோடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பூர்ணா இருந்து வருகிறார். அதில் போட்டியாளர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவரை தன்னருகே அழைத்து பாராட்டியிருக்கிறார். அதோடு கன்னத்தில் முத்தமிட்ட அவர், அந்த இளைஞனின் கன்னத்தை கடிக்கவும் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன், ஒரு நடுவர் செய்யும் வேலையா என கேவலமாக விளாசி வருகின்றனர்.