பிரபல தமிழ் ஹீரோவுக்கு கட்டிய கோவில் -எந்த நடிகருக்கு தெரியுமா ?
சென்னையை அடுத்த கோவூர் பகுதியில் நடிகர் அஜித் குமாருக்கு 3,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாகத் தனிக் கோயில் கட்டத் திட்டமிட்டுள்ளதாக அவரது ரசிகர்கள் அறிவித்துள்ளனர். கோயிலுக்கான அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, சென்னை மாங்காடு அடுத்த கோவூர் பகுதியில் அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பின் சார்பில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைவரும் அஜித்தின் ரசிகருமான பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில், அஜித்தின் 5 அடி உயர முழு உருவச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
சிலையைத் திறந்து வைத்த ரசிகர்கள், அதற்கு மாலை அணிவித்து, 108 தேங்காய்களை உடைத்து, பாலாபிஷேகம் மற்றும் கற்பூர ஆரத்தி காட்டி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். சிலை திறப்பு விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் பாபு, ‘‘கோவூர் பகுதியில் அஜித் குமாருக்கு 3,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாகத் தனிக் கோயில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்று தெரிவித்தார்.