×

தாய் கிழவி... 7 வருடங்களுக்குப் பிறகு தனுஷ், அனிருத் காம்போவில் புதிய பாடல் வெளியானது! 

 

தனுஷ் மற்றும் அனிருத் காம்போவில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' பாடல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் அனிருத் காம்போவிற்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 'ஒய் திஸ் கொலவெறி டி' பாடல் முதல் இந்தக் கூட்டணியில் வெளியாகும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்த வெற்றிக் கூட்டணியில் சிறிய விரிசல் ஏற்படவே கடந்த 7 வருடங்களாக தனுஷ் படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. 

தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த சூப்பர் ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது படத்திலிருந்து 'தாய்கிழவி' என்ற பாடல் வெளியாகியுள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு DnA கூட்டணியில் இருந்து பாடல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் படத்தின் இசைக்கு ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். கேட்பதற்கு துள்ளலான பாடலாக அமைந்துள்ளது. 

திருச்சிற்றம்பலம் படத்தில்  நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் ஆகிய மூவரும் நடித்துள்ளனர். மேலும் முன்னணி இயக்குனர் பாரதிராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ்  உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

<a href=https://youtube.com/embed/q6LjN1UVPkE?autoplay=1><img src=https://img.youtube.com/vi/q6LjN1UVPkE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Thaai Kelavi - Official Lyric Video | Thiruchitrambalam | Sun Pictures | Dhanush | Anirudh" width="677">