பிரபல நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தக்காளி ஸ்ரீனிவாசன் மறைந்தார்
Mar 11, 2026, 11:47 IST
தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்தவர் தக்காளி சீனிவாசன். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று பெங்களூருவில் நடக்கிறது. தமிழில் வெளியான ‘இவர்கள் வருங்காலத்தூண்கள்’, ‘மனசுக்குள் மத்தாப்பூ’, ‘நாளை மனிதன்’, ‘அதிசய மனிதன்’, ஆகிய படங்களை தயாரித்துள்ளார். ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘விட்னஸ்’, ‘அசோகவனம்’, ‘அடுத்தது’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘நாளை மனிதன்’, ‘வலது காலை வைத்து வா’, ‘அதிசய மனிதன்’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘விட்னஸ்’, ‘புதிய ஆட்சி’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
‘சூரசம்ஹாரம்’, ‘நாளை மனிதன்’, ‘சிறையில் சில ராகங்கள்’, ‘ஜென்ம நட்சத்திரம்’, ‘விட்னஸ்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் ஒரு ஆசிரமம் நடத்தி, தான் தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வந்த தக்காளி சீனிவாசன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.