×

தளபதி 67-ஐ தட்டித்தூக்கிய பிரபல நிறுவனங்கள்.. அதிரடி அறிவிப்பு !

 

விஜய்யின் 'தளபதி 67' படத்தை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'தளபதி 67'. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாய் எகிற போயுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு படக்குழுவினர் தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளனர். நேற்று தொடங்கிய இந்த படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்டுகள் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளன. அந்த வகையில் 'தளபதி 67' படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதேபோன்று இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளது. முன்னணி நிறுவனங்கள் இந்த உரிமையை வாங்க போட்டிப்போட்ட நிலையில் அதிக தொகைக்கு இந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளது. 

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை திரிஷா, அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்திற்காக தாறுமாறாக இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.