×

கொடூரமான வில்லனாக மிரட்ட வரும் சஞ்சய் தத்..  'தளபதி 67' படக்குழுவின்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

 

 விஜய்யின் 'தளபதி 67' படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ஆம் தேதியே தொடங்கிவிட்ட நிலையில் படத்திற்கான அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நேற்று தான் அறிவித்தது. இந்த படம் லோகேஷ் கனகராஜின் யூனிவர்சில் உருவாகிறதா அல்லது தனி படமாக உருவாகுமா என ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

 

இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் இன்று காலை தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 

ஏற்கனவே திரிஷா, பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'கேஜிஎப் 2' படத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  ‌