×

விஜய்க்கு வில்லனாகிறாரா சிம்பு ?.. ‘தளபதி 67’ அனல் பறக்கும் அப்டேட் 

 

 ‘தளபதி 67’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் சிம்பு நடிப்பதாக தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. 

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸாக உருவாகிறது ‘தளபதி 67’. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு அனிரூத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றனர். 

‘தளபதி 67’ என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2-ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு நாளை காஷ்மீரில் தொடங்கவுள்ளது. இதற்காக விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் இன்று காலை தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தில் வில்லனாக நடிகர்கள் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிப்பபதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக சிம்புவை களமிறக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ‘வாரிசு’ படத்தில் ‘தீ தளபதி’ படத்தின் ப்ரோமோஷனுக்காக சிம்பு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.