×

அமெரிக்காவில் நடிகர் விஜய்... 'எதிர்காலத்திற்கு வருக' என வெங்கட் பிரபு ட்வீட் !

 

'தளபதி 68' படத்திற்காக அமெரிக்காவில் உள்ள கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

'லியோ' படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். 'தளபதி 68' என அழைக்கப்படும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 

 

இந்த படத்தில் அப்பா - மகன் என்று இரண்டு மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். அப்பா கதாபாத்திரத்திற்கு நடிகை ஜோதிகாவும், மகன் கதாபாத்திற்கு நடிகை பிரியங்கா அருள் மோகனும் ஜோடியாக நடிக்கின்றனர். இதுதவிர ஜெய், பிரபுதேவா, மாதவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

தற்போது இந்த படத்தின் பணிகளுக்காக நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். அங்கு பிரபல கிரியேட்டிவ் ஸ்டுடியோ ஒன்றில் 'தளபதி 68' பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிரியேட்டிவ் டெக்னாலஜி ஸ்டுடியோவிற்கு நடிகர் விஜய் சென்றுள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 

முதல்முறையாக இந்திய சினிமாவில் இந்த தொழில்நுட்பம் 'தளபதி 68' படத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் ஷாருக்கானின் ஃபேன், கமலின் 'இந்தியன் 2' படங்களில் இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த படத்திற்காக அட்வான்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்துகிறது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வெங்கட் பிரபு, 'எதிர்கால உலகத்திற்கு வருக' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.