×

அடிதூள்... பூஜையுடன் தொடங்கும் ‘தளபதி 68’... மாஸ் அப்டேட் 

 

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 68’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘லியோ’ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ‘தளபதி 68’ மிரட்டலாக உருவாகவுள்ளது. வெங்கட் பிரபுவின் வழக்கமான என்டர்டெயினர் படமாக உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. 

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சர்வதேச கலைஞர்கள் பணியாற்றவுள்ளனர். ‘லியோ’ படத்தின் ரிலீசுக்கு பிறகு இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என கூறப்படுகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும், படப்பிடிப்பு வரும் அக்டோபரில் இருக்கும் என கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடிக்கவுள்ளாராம். இது குறித்து விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.