×

தளபதி விஜய்யை சீண்டப்போகும் தனி ஒருவன்? – பக்கா மாஸ் அப்டேட்.

 

விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் படத்தின் தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ள நிலையில் தற்போது படத்தின் மாஸ்ஸான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.

  ‘லியோபடத்தை முழுவதும் முடித்துள்ள நடிகர் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ‘தளபதி 68’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் அந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது

படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் படத்தில் இணையும் நடிகர் நடிகைகள் குறித்த தகவல் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி படத்தில் இரண்டு விஜய், அப்பா- மகன் கதாப்பாத்திரமாக வருவார்கள் என்றும் அதில் அப்பா கதாப்பாத்திரத்திற்கு ஜோடி நடிகை சிம்ரன் என்றும் மகன் கதாப்பாத்திரத்திற்கு ஜோடி பிரியங்கா மோகன் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் அரவிந்த் சாமி இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக மிரட்டியதை தொடர்ந்து அரவிந்த் சாமி பல படங்களில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி ‘தளபதி68’ படத்தில் இணைய அதிக வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.