'வேட்டையன்' FDFS பார்க்க வந்த தளபதி விஜய்.. வைரல் வீடியோ..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி விஜய் சென்னையில் உள்ள திரையரங்கிற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் நடிப்பில், ஞானவேல் இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’வேட்டையன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.
முதல் நாள் முதல் காட்சி முடிந்தவுடன் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தமிழ் திரை உலக சேர்ந்த பல பிரபலங்கள் இன்று திரையரங்குகளில் சென்று ’வேட்டையன்’ படத்தை பார்த்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் மிகவும் அரிதாகவே தியேட்டரில் வந்து படம் பார்ப்பார் என்றும், அவருடைய படத்தை பார்க்க கூட அவர் வருவதில்லை என்ற நிலையில் ரஜினியின் ’வேட்டையன்’ படத்தை பார்க்க வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல தனுஷ் உள்பட பல பிரபலங்கள் இன்று திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.