×

‘தளபதி 67’ன் எதிர்பார்பை எகிறவைக்கும் மாஸ் கூட்டணி.

 

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தயாராகிவரும் விஜயின் 67ஆவது திரைபடத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். தொடர்ந்து ஜனவரி 2ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இன்று படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் போஸ்டர்ஸ் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.

 அனிரூத் இசையமைப்பாளராகவும், மனோஜ் பரம்மஹம்சா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றனர். மேலும் எடிட்டிங் பணிகளை பிலோமின் ராஜ் மேற்கோள்கிறார். தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய், லோகேஷ் கனகராஜ், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் இன்று காலை தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். அங்கு 50 நாட்கள் வரை படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில்.  தற்போது எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத நடிகர்களின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.

 அந்த வகையில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடன இயக்குநர் சாண்டி இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகிறார், நடிகை பிரியா ஆனந்த், இய்ககுநர் மிஸ்கின், நடிகர் மன்சூர் அலிகான், ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த வரிசையில் தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜூன், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், மற்றும் மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் ஆகியோர் இணைந்துள்ளனர்.