×

‘தளபதி68’ பட டைட்டில் என்ன தெரியுமா பாஸ்!.....

 

தளபதி விஜய் நடிப்பில் தயாராகிவரும் அவரது 68வது படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி68 படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து, மீனாட்சி சவுத்ரி, சினேகா,மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று இளமைகால விஜய் என்றும் தகவல்கள் வெளியானது இதனை தொடர்ந்து படப்பிடிப்பு படு ஜோராக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் டைட்டில் குறித்த தகவல் வந்துள்ளது.

அதன்படி மூன்று  டைட்டில்களை வெங்கட் பிரபு தேர்வு செய்துள்ளாராம். அதில் ஒன்று ‘பாஸ்’. ஒரு வேளை இது படத்தின் தலைப்பாக இருக்கலாம் என்றும் வரும் புத்தாண்டை முன்னிட்டு தலைப்பு அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.