☰
×

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமன்னா பட ட்ரைலர்

 

பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் தமன்னா இணைந்து நடிக்கும் ‘தி விவான்’ என்ற திரைப்படம், வன தேவி கோயிலைச் சுற்றியுள்ள கதையம்சத்தை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாடகர் சர்கம் வைஷ், படக்குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ‘நான் 3 ஆண்டுகளாக உழைத்து உருவாக்கிய ‘அயிகிரி நந்தினி’ பாடலின் 25 வினாடி பகுதியை, எனது எந்தவித அனுமதியுமின்றி ‘தி விவான்’ டிரெய்லரில் அப்படியே பயன்படுத்தியுள்ளனர்.

2024ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மாற்றியமைக்கப்பட்ட எனது அசல் படைப்பின் தயாரிப்பு மற்றும் குரல் பகுதிகள் திருடப்பட்டுள்ளன. முன்னணி இசை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்த பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியது எனது தொழிலை பாதிக்கும். எனவே, டிரெய்லர் மற்றும் படத்திலிருந்து உடனடியாக பாடலை நீக்க வேண்டும்; இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து படக்குழுவினர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.