×

"காதலில் சுதந்திரம் வேண்டும்"-நடிகை தமன்னா 

 
இந்தி நடிகர் விஜய் வர்மாவுடனான காதல் முறிவுக்கு பிறகு தமன்னா அளிக்கும் பேட்டிகளில், ஒருமுறையாவது காதலை பற்றிய தத்துவத்தை பேசாமல் இருப்பதில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளை கூறியிருக்கிறார். அவர் பேசுகையில், ‘காதல் என்றால், அது என்ன உறவு என்பதில் மக்கள் குழப்பம் அடைகிறார்கள் என்று நினைக்கிறேன். காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாயம் இருக்கிறது. உங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து, மற்றவர்கள் நீங்கள் விரும்புவதை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பும் தருணத்தில், காதல் வெறும் வியாபாரம் ஆகிவிடுகிறது.
அது ஒரு பரிவர்த்தனைதான். இருவர் தனித்தனியாக ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். ஆனால், அந்த உறவே காதலை நன்கு வரையறுக்கிறது என்று அர்த்தம் இல்லை. நாம் ஒருவரை மனதார நேசிக்க வேண்டும் என்றால், அவர்களை சுதந்திரமாக விட்டுவிட வேண்டும். உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது வலிய திணிப்பதன் மூலம் அவரை நீங்கள் நேசிக்க முடியாது