×

அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’.. படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு !

 

 அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகும் ‘தண்டகாரண்யம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. 

‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு' படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘தண்டகாரண்யம்’. இந்த படத்தில் தினேஷ் மற்றும் கலையரசன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

இந்த படத்தின் கதாநாயகிகளாக ரித்விகா, வின்ஷூசாம் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷபீர், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பா ரஞ்சித்தின் நீலம் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளது. இதை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் ஒன்றாக இருக்கும் கொண்டாட்டத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.