×

கேமியோ ரோலில் பிரபல நடிகர்.. ‘தங்கலான்’ புதிய அப்டேட்

 
‘தங்கலான்’படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். 

பா ரஞ்சித்  மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.  தற்போது இந்த படத்தின் படபிடிபபு 10 நாட்கள் நடைபெற்று வருகிறது.  இந்த படப்பிடிப்பில் விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிது.