×

தங்கலான் படத்தின் 2வது பாடல் ‘தங்கலானே’ வெளியானது.. !
 

 

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, அர்ஜுன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்த படம் ஆங்கிலேய இந்தியர் காலத்தினை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் லைவ் ஸ்வுண்ட் முறையை பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் விக்ரம் செலுத்திய உழைப்பு மற்றும் ஈடுபாடு என்பது, இதற்கு முன்னர் அவர் நடித்த அந்நியன், ஐ, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் செலுத்தியது, தங்கலான் படத்தில் செலுத்திய உழைப்போடு ஒப்பிட்டால் 3 சதவீதம்தான் என அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், படத்தின் முதல் பாடலான மேனா மினுக்கி பாடல் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. 

<a href=https://youtube.com/embed/K_qCM4Hnt8A?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/K_qCM4Hnt8A/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படக்குழுவினர் மும்பை, கொச்சி, ஹைதரபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபடவுள்ளனர்.