Locked& Loaded..! திரையரங்கை அதிர வைக்க காத்திருக்கும் தங்கலான்
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படத்தில் இருந்து அறுவடை பாடல் வெளியாகி உள்ளது.இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.ஸ்டுடியோ கிரீன் (Studio Green) ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இப்படம் கடந்த 1900ஆம் ஆண்டுகளில் கோலார் தங்க வயல் (KGF - Kolar Gold Field) பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய படமாக உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்தியா படமாகவும் உருவாகியுள்ளது. இப்படம் வரும் ஆக 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தை குறித்த எதிர்பார்ப்பு மக்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கும், இறுதி பதிப்பும் முடிவெடுக்கப்பட்டதாகவும் படத்தில் ஒளிப்பதிவாளர் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இயக்குனர், உதவி இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர் இடம் பெற்றுள்ளனர். அனைவரும் இப்படத்திற்காக ஆகஸ்ட் 15 தேதிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.