தங்கலான் பெயரின் உண்மை அர்த்தம் இதுதானா..?
Updated: Aug 15, 2024, 12:40 IST
விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகி உள்ளது. தற்போது கிடைத்த தகவலின் படி தங்கலான் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கலான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்ரமிடம், தங்கலான் பெயரின் உண்மை அர்த்தம் பற்றி கேள்வி கேட்டனர்.இதற்கு பதில் அளித்த அவர், தங்கலான்' என்பது ஒரு பழங்குடியினரின் பெயர். அந்த இனத்தின் தலைவர் பெயர் தங்கலான். அதனால் தான் இந்த படத்திற்கு தங்கலான் என்று பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் கதை தங்கச் சுரங்கத்தைச் சுற்றி நடப்பதால், இது கேஜிஎஃப் உடன் ஒப்பிடப்படுகிறது. ஆனால் இந்த படத்தின் கதை வேற. கேஜிஎஃப் படத்திற்கும் இதற்கும் எந்த ஒரு சம்மந்தமும் இருக்காது என்று விக்ரம் தெரிவித்துள்ளார்.