×

ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டையாடும் தங்கலான்...!

 

நடிகர் விக்ரம் - இயக்குநர் பா. ரஞ்சித் கூட்டணியில் உருவாக்கியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.ஜி. வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழக உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுவே இப்படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை எடுத்துக்காட்டுகிறது.ஏனென்றால் இதற்குமுன் வெளிவந்த விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரூ. 17 கோடிக்கு தான் விற்பனை ஆனது. ஆனால், தற்போது தங்கலான் படத்தின் மீது மாபெரும் நம்பிக்கை இருப்பதன் காரணமாகவே இப்படத்தை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என்கின்றனர்.தங்கலான் படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் இதுவரை ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கண்டிப்பாக முதல் நாள் வசூல், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.