×

அட... விரைவில் ‘தனி ஒருவன் 2’ அறிவிப்பு ?.. ஹாப்பியில் ஜெயம் ரவி ரசிகர்கள் !

 

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகயிருக்கும் ‘தனி ஒருவன் 2’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. 

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘தனி ஒருவன்’. இந்த படத்தில் ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். சித்தார்த் அபிமன்யூ என்ற அந்த கதாபாத்திரம் ரசிகர்களால் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. 

மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெயம் ரவி, அரவிந்தசாமி கூட்டணியில் நயன்தாரா இணைந்து கலக்கியிருந்தார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் ஈட்டியது. 

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குனர் மோகன்ராஜா அறிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஜெயம் ரவி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.