×

'நன்றி மாமே ' : 'குட் பேட் அக்லி' படம் குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி 
 

 

'குட் பேட் அக்லி' திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் நடிகை த்ரிஷா இயக்குனருக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகளாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. 
பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களில் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. கடைசியாக அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து இருந்தார்.  அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'குட் பேட் அக்லி' படத்தில் திரிஷா நடித்திருக்கிறார். நேற்று முன்தினம் வெளியான இப்படம் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.