×

லப்பர் பந்து இயக்குனரின் படத்தில் நடிக்கும் தனுஷ் -ஹீரோயின் யார் தெரியுமா ?

 
தனுஷ் நடித்துள்ள ‘கர’ என்ற படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி முடித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், கருணாஸ், பிரித்வி பாண்டிராஜ் , ஜெயராம், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் படத்தின் முதல் காப்பியை இயக்குனர் விக்னேஷ் ராஜா தயார் செய்து தயாரிப்பாளரிடம் காட்டியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது என்றாலும் அதன் நீளம் 3 மணி நேரத்திற்கு மேல் இருப்பதால் அதை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். முதலில் அதற்கு சம்மதிக்காத இயக்குனர் பின்னர் படத்தை இரண்டரை மணி நேரமாக குறைக்க முன்வந்துள்ளார். அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அப்படத்தை தொடர்ந்து ‘லப்பர் பந்து’ படம் மூலம் கவனம் ஈர்த்த தமிழரசன் பச்சமுத்து இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாகூர், நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ‘உறியடி’ விஜய குமார் வில்லனாக நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.