×

பல கோடிக்கு அதிபதியான தனுஷின் ஹீரோயின் -யார் தெரியுமா ?

 

நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் இப்போது கோலிவுட்டில் ஒரு சிலரை தவிர பெரிய அளவில் சாதிக்கவில்லை .இந்நிலையில் அவருடன் ஜோடியாக நடிக்கும் ஒரு நடிகை பற்றி ஒரு தகவல் உலா வருகிறது 
நடிகை கிரித்தி சனோன் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.
இவர் கடந்த 2014ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘1: நேநொக்கடினே’ என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் கிரித்தி சனோன். அதன்பிறகு தனது தாய்மொழியான இந்திக்கு சென்ற கிரித்தி சனோன் ‘ஹீரோபன்ட்டி’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல் 4’, ‘மிமி’, ‘பச்சன் பாண்டே’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறிவருகிறார். 
இந்த நிலையில், பாலிவுட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை கிரித்தி சனோனின் தற்போதைய சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் மொத்த சொத்து மதிப்பு 82 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் அவரை 5.4 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். இதன்மூலம் வருடத்திற்கு 12 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் விளம்பரங்களில் நடிக்க ரூ.1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். இதன் மூலம் பாலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக கிரித்தி சனோன் இருக்கிறார்.