×

"அரங்கம் அதிரட்டுமே.. விசில் பறக்கட்டுமே.." 100 நாட்களில் கூலி ரிலீஸ்.. சிறப்பு வீடியோ வெளியீடு...
 

 


ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘கூலி’. ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாயிர், சத்யராஜ், ஆமீர்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது.படத்தில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.