என் திரை வாழ்க்கைவின் சிறந்த பயணம் ‘விடாமுயற்சி.. நடிகை திரிஷா நெகிழ்ச்சி...!
Feb 8, 2025, 12:25 IST
விடாமுயற்சி படக்குழுவுக்கு நடிகை திரிஷா நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்தை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் அஜித்தின் குட் பேட் அக்லி, சூர்யா 45 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் திரிஷா. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார்.