×

 ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’... ஆச்சர்யத்தில் இந்திய ரசிகர்கள் !

 

‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆணவப்படம் ஆஸ்கர் வென்று சாதனை படைத்துள்ளது.

உலக ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் சிறந்த ஆணவப்பட குறும்பட பிரிவில் இந்தியாவில் இருந்து இறுதிப்போட்டிக்கு தேர்வான ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ படம் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பத்தில் இந்த ஆவணம் படம் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள அய்யூர் பகுதியில் தாயிடமிருந்து பிரிந்த ஆண் குட்டி யானை காயத்துடன் சுற்றித்திரிந்தது. இந்த யானையை மீட்ட வனத்துறையினர் முதுகலை யானைகள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். 

இந்த குட்டியை யானையை தொப்புக்காடு யானை முகாமில் பராமரிப்பாளர்களாக இருந்த பொம்மன், பெள்ளி தம்பதி பாசமாக வளர்த்தனர். காட்டு நாயக்கர் பழங்குடியினத்தை சேர்ந்த அவர்கள், அந்த யானை குட்டியை பாசத்துடன் வளர்த்த கதைதான் ஆவணப்படமாக உருவாகி வெளியானது. இந்த உணர்புப்பூர்வமான தத்ரூபமாக ஆவணமாக கார்த்தி கொன்சால்வ்ஸ் என்பது இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.