×

ரிஸ்க் எடுக்கிறதா படக்குழு... 'புஷ்பா 2' ரன் டைம் தகவல் வெளியானது.. 

 

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் புஷ்பா 2.  பஹத் பாசில் வில்லனாக நடிக்கும் இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீசாகிறது.  இந்நிலையில், இப்படத்தின் ரன் டைம் பற்றிய தகவல் தற்போது கிடைத்துள்ளது

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரின் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ராஷ்மிகா நாயகியாக நடித்த இப்படத்தில் பஹத் பாசில் நடித்திருந்தார். அனைவரும் பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே நடக்கும் காட்சிகளை எதிர்பார்த்து ஆவலாக காத்துகொண்டு இருந்தார். ஆனால் புஷ்பா படத்தில் பஹத் பாசில் ஒரு சில காட்சிகளில் தான் நடித்திருந்தார் இருப்பினும் அவர் வரும் காட்சிகள் மிரட்டலாக இருந்தது.

<a href=https://youtube.com/embed/HtmlDoXttNg?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/HtmlDoXttNg/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இரண்டாம் பாதி வந்தால் கண்டிப்பாக பஹத் பாசில் மற்றும் அல்லு அர்ஜுன் இடையே நடக்கும் மோதல்கள் தீயாய் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தற்போ து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது. புஷ்பா 2 படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் ட்ரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. புஷ்பா 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கவுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 ரன் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி புஷ்பா 2 படத்தின் ரன் டைம் முதல் பாதி ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் எனவும் இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் என மொத்தம்   3 மணி நேரம் 21 நிமிடங்களாம்.  இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். . 

என்னதான் படம் சிறப்பாகவே இருந்தாலும் இரண்டரை மணி நேரத்திற்கு அதிகமாக ரன் டைம் இருந்தால் ரசிகர்கள் சலிப்படைகின்றனர். அப்படி இருக்கையில் புஷ்பா 2 திரைப்படம் மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடிய படமாக இருப்பது ரசிகர்களை சற்று யோசிக்க வைத்துள்ளது. இருந்தாலும் புஷ்பா 2 ஒரு பக்காவான மாஸான கமர்ஷியல் படம் என்பதால் ரசிகர்களுக்கு கண்டிப்பாக சலிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகின்றது.