×

பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை தழுவி திரைப்படம்

 

மலையாளத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிருதயம். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஹிருதயம் திரைப்படம் பிரபலம் அடைந்தது. இப்படத்தில் மோகன்லாலின் மகனும் நடிகருமான பிரணவ் மோகன்லால் நடித்திருந்தார். தர்ஷனா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இந்தப் படத்தை இயக்குனர் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்தார். இப்படத்தில் தர்ஷனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தர்ஷனா தமிழ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இவர் சேத்துமான் படத்தை இயக்கியவர் ஆவார். இப்படத்தில் தர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் கனா, துணிவு ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பூக்குழி நாவலை தழுவி இப்படம் உருவாகிறது.  இதன் படப்பிடிப்பு பெங்களூரில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் படத்திற்கு வசனம் எழுதுகிறார்.