போகுமிடம் வெகுதூரமில்லை படம் ஓடிடியில் வெளியானது
Oct 9, 2024, 14:45 IST
மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகிய படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. அமேசான் ஓடிடி தளத்தில் திரைப்படம் வெளியாகியுள்ளது. திரையரங்கில் படத்தை காண தவறவிட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.