×

மணிரத்னத்தின் ‘நவரசா’வில் முதல் படம் நிறைவானது… நடிகர்கள் லிஸ்ட் இதோ!

இயக்குனர் மணிரத்னம் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார். நவரசா என்று பெயரிடப்பட்ட இந்த சீரிஸை மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கயுள்ளனர். கௌதம் மேனன், விஜய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் ஆகியோர் சீரிஸில் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மணிரத்னமும் இந்த வெப்சீரிஸில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த வெப்சீரிஸ் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உள்ளது. நவரசா வெப் சீரிஸின் 9 பாகங்களில் முதல் பாகம் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த
 

இயக்குனர் மணிரத்னம் நெட்பிலிக்ஸ் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரிக்கிறார். நவரசா என்று பெயரிடப்பட்ட இந்த சீரிஸை மொத்தம் 9 இயக்குனர்கள் இயக்கயுள்ளனர். கௌதம் மேனன், விஜய் நம்பியார், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன் ஆகியோர் சீரிஸில் இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மணிரத்னமும் இந்த வெப்சீரிஸில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த வெப்சீரிஸ் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உள்ளது.

நவரசா வெப் சீரிஸின் 9 பாகங்களில் முதல் பாகம் நிறைவடைந்துள்ளது. தற்போது இந்த முதல் பாகத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்த முதல் பாகத்திற்கு ‘இன்மை’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் சித்தார்த், நடிகை பார்வதி திருவொத்து, பாவெல் நவகீதன், அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் பாகத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். மொத்தம் 6 நாட்களில் முழுபடப்பிடிப்பும் பாண்டிசேரியில் நடைபெற்றுள்ளது. சித்தார்த் இந்த முதல் பாகத்தைத் தயாரித்துள்ளார். சித்தார்த் நடிக்க இருக்கும் இரண்டு படங்களில் இது முதல் படமாகும்.