×

லப்பர் பந்து படத்தின் முதல் பார்வை ரிலீஸ்

 

இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். தற்போது அடுத்தடுத்து பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் வசனக்கர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘அட்டக்கத்தி’ தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வதந்தி' வெப் தொடரில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகவும், ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து தொடங்கிய தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வௌியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி, டீசர் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.