×

காவல் அதிகாரியாக களம் இறங்கும் நகுல் - தி டார்க் ஹெவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 
நகுல் நடிப்பில் கடைசியாக வெளியான வாஸ்கோடகாமா திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. திரைப்படம் கடந்த மாதம் ஓடிடியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக நகுல் தி டார்க் ஹெவன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பாலாஜி இயக்கியுள்ளார். படத்தை பி ப்ரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நகுல் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். 25 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் மர்மமான கொலையை சுற்றி நடக்கும் கதையாக இப்படம் அமைந்துள்ளது. நகுல் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை. இப்படத்த்தில் ரேனு சவுந்தர் கதாநாயாகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், தோனி தயால், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.