சீமான் நடிக்கும் ’சீமானின் தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு `
May 9, 2025, 18:31 IST
நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் நடித்துள்ள ’சீமானின் தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் தற்போது முழு நேர அரசியலில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் கூட அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ’லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ’சீமானின் தர்மயுத்தம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.