பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Oct 12, 2024, 18:07 IST
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் திறமை மிக்க இயக்குனர் பொன்ராம். 2013 ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்கி மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கினார். இந்நிலையில் அடுத்ததாக பொன்ராம் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் சரத் குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சண்முக பாண்டியன் கடைசியாக மதுர வீரன் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக படை தலைவன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.