×

கிங்டம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழில் வெளியானது...!

 

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தமிழில் வெளியானது. 

 
விஜய் தேவரகொண்டா தற்போது அவரது 13-வது படமாக ’கிங்டம்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஸ்ரீ காரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது. கௌதம் தின்னனுரி இதற்கு முன் 'ஜெர்ஸி' & 'மல்லி ராவா’ ஆகிய படங்களை இயக்கி, அதற்கு தேசிய விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' படத்தின் தமிழ் டீசருக்கு நடிகர் சூர்யா குரல் கொடுத்துள்ளார். கிங்டம் படம் அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. இப்படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து விஜய் தேவரகொண்டா சிக்ஸ் பேக் வைத்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது.

<a href=https://youtube.com/embed/unoKB7I7Xpk?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/unoKB7I7Xpk/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
இந்த நிலையில், 'கிங்டம்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான " இதயம் உள்ளே வா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் அனிருத் பாடியுள்ளார்.
பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.