×

லப்பர் பந்து படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

 

இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ஹரிஷ் கல்யாண். தற்போது அடுத்தடுத்து பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘லப்பர் பந்து’. இந்த படத்தை 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் வசனக்கர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘அட்டக்கத்தி’ தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வதந்தி' வெப் தொடரில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.  இவர்களுடன் பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு புருஷோத்தமன் ஒளிப்பதிவாளராகவும், ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து தொடங்கிய தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  <a href=https://youtube.com/embed/_XhRghui8iE?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/_XhRghui8iE/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்நிலையில், லப்பர் பந்து படத்திலிருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.