×

ரிபெல் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

 

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ரிபெல படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது.

பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், இசை மட்டுமன்றி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது, நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். இதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் என்ற திரைப்படத்திலும் ஜி.வி.பிரகாஷ் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.

<a href=https://youtube.com/embed/VS1-x7WAqzw?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/VS1-x7WAqzw/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

ரிபெல் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. இது டிரெண்டாகி வருகிறது.