×

 ‘வீர தீர சூரன் 2 ’ படத்தின் முதல் பாடல் வெளியானது !

 

வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் தனது 63வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் தனது 62 வது திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு வீர தீர சூரன் பாகம் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் தவிர துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமோடு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். கிராமத்துக் கதைக்களத்தில் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

<a href=https://youtube.com/embed/tHvkzclvfuY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/tHvkzclvfuY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
அதன்படி இந்த படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கல்லூறும் எனும் முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை ஹரி சரண், ஸ்வேதா மோகன் ஆகியோர் இணைந்து பாடி இருக்கும் நிலையில் இப்பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.