×

"தி கோட்" - டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

 

'தி கோட்' படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

null


சமீபத்தில் 'தி கோட்' படத்தின் டிரைலர் மற்றும் 3 பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இதில் டிஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய் இளம் வயதில் தோன்றும் காட்சிகள் பெரியளவில் கவனம் ஈர்த்தன. இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், 'தி கோட்' திரைப்படம் வெளியாக இன்னும் 1 வாரம் உள்ளநிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று ஒரு சில திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. இதனையடுத்து ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட் முன்பதிவு செய்துவருகின்றனர். நாளை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் 4-வது பாடல் வெளியாகிறது.