செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவை நினைவுபடுத்தும் -தி கிராண்ட் மாஸ்டர் பட விமர்சனம்
துப்பரவு தொழிலாளியான அபர்ணதியின் மகன் சிறுவயதிலிருந்தே செஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஆனால், அவரது கனவுக்கு குடும்பத்திலும் சில தடைகள் இருக்கின்றன. அபர்ணதி, மகன் நன்றாகப் படித்து வக்கீலாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், மகனுக்கு உலகமே செஸ் விளையாட்டைச் சுற்றியே நகர்கிறது. மகனின் கனவைப் புரிந்துகொள்ளும் தாய் அபர்ணதி, அவனை செஸ் விளையாட்டில் முன்னேற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். இதன் பிறகு நடப்பதே மீதி கதை. ஏழைத் தாயின் வலியை அபர்ணதி சிறப்பாக காட்சிகளால் கடத்தியிருக்கிறார்.
அவரது நடிப்பை பாராட்டலாம். கிராண்ட் மாஸ்டராக நடித்திருக்கும் சிறுவன் அஸ்வின், செஸ் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தையும், தனது கனவை நோக்கிய பயணத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் போட்டிகளில் பங்கேற்கும் பல காட்சிகள், நிஜ வாழ்க்கையின் செஸ் சாம்பியனான பிரக்ஞானந்தாவை நினைவுபடுத்துகின்றன.