×

ஆயிரம் கோடியை அள்ளிய ஜவான்... பாக்ஸ் ஆபிஸ் ஹிட்....

 

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம்  உலகளவில் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. 

இந்நிலையில், ஜவான் திரைப்படம் உலகளவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது. கே.ஜி.எப். 2, ஆர்.ஆர்.ஆர். படங்களை தொடர்ந்து ஜவான் திரைப்படமும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதனை படக்குழுவினரும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.